×

அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கூறுகையில், ‘எனது பதவிக்காலத்தில் சோகமான தருணம். நான் தவறு செய்தேன். மீண்டும் தவறு செய்ய விரும்பவில்லை. எனவே, உண்மையில் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நான் சொல்ல ஒரே ஒரு விஷயம் உள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய படைகளை அனுப்ப வேண்டாம். உக்ரைனைத் தாக்குவதை நிறுத்துங்கள். அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஏற்கனவே பலர் இறந்து விட்டனர்,’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.* பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.13.44 லட்சம் கோடி இழப்புஉக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.13.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. பங்குச் சந்தைகளில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. உக்ரைன் – ரஷ்யா  இடையே போர் பதற்றம் துவங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. நேற்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, பங்குச்சந்தைகள் கடும் சரிவை அடைந்தன. நேற்று வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திலேயே முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் இந்த இழப்பு ரூ.13.44 லட்சம் கோடியாக உயர்ந்தது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.3,417.16 கோடி மதிப்பிலான பங்குகளை விறறனர். வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை  2,702.15 புள்ளிகள், அதாவது 4.72 சதவீதம் சரிந்து 54,529.91 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 815.30 புள்ளிகள், அதாவது,  4.78 சதவீதம் சரிந்து 16,247.95 புள்ளிகளாகவும் இருந்தது. கடந்த 4 மாதத்தில் மட்டும் பங்குச்சந்தையில் மொத்தம் சுமார் ரூ.32 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நேற்றைய சரிவு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத மோசமான பங்குச்சந்தை சரிவாக கருதப்படுகிறது.* படைகளை அனுப்ப முடியாத நேட்டோ‘வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்’ அழைக்கப்படும் ‘நேட்டோ’ அமைப்பில் 30 நா0டுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில் எந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும், நேட்டோ கூட்டுப்படைகள் அங்கு சென்று அதற்கு உதவியாக போரிடும். ஆனால், உக்ரைன் இந்த அமைப்பில் இல்லாத காரணத்தால், அதற்கு உதவியாக படைகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாகவே ரஷ்யாவின் தாக்குதலுக்கு இந்த அமைப்பு வெறும் எதிர்ப்பை மட்டுமே தெரிவிக்க முடிகிறது. பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் மால்டோவா, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, போலாந்து, பெலாரஸ் போன்ற நாடுகள் உள்ளன. இவற்றில் ருமெனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, போலாந்து ஆகியவை  ‘நேட்டோ’ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளின் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது பற்றி இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்டோல் டென்பெர்க் நேற்று அளித்த பேட்டியில்,  ‘உக்ரைனுக்கு நேட்டோ உறுதுணையாக இருக்கும். உக்ரைனில் தற்போது வரையில் நேட்டோ படைகள் எதுவும் இல்லை. அந்த நாட்டுக்கு ஆதரவாக நேட்டோ படைகளை அனுப்பும் திட்டமும்  இல்லை. ஆனால், நேட்டோவில் இடம் பெற்றுள்ள நாடுகளில் படைகளை நிறுத்தி இருக்கிறோம். 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், 120க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன,’ என தெரிவித்தார்.* நான் இருந்திருந்தால் சண்டை வந்திருக்காதுஅமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அதிபர் பைடன்  நிலைமையை சரியாக கையாண்டிருந்தால் உக்ரைனில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை வந்திருக்காது. அமெரிக்காவில் இப்போது நான் ஆட்சியில் இருந்திருந்தால், உக்ரைன் மீது புடின் படையெடுத்து இருக்க மாட்டார். இப்போது  போர் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால், புடின் பணக்காரராகி கொண்டு இருக்கிறார்,’ என தெரிவித்தார். …

The post அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் appeared first on Dinakaran.

Tags : UN ,Secretary-General ,Antonio Guterres ,
× RELATED பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக...